மடுமாதாவின் திருச்சொரூபம் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது !

மடுமாதாவின் திருச்சொரூபம் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது !
தொடர்ந்து, யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடுமாதாவின் திருச்சொரூபத்தை தரிசிப்பதற்கு யாழ்.மரியன்னை தேவாலயத்திற்கு வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாகவிருந்தது.
மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறித்த நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில் இன்று காலை 10.30 மணி தொடக்கம் 02.30 மணி வரை யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும், இன்று மாலை 03.00 மணி தொடக்கம் 03.30 மணி வரை புனித மடுத்தீனார் குரு மடத்திலும்,04.00 மணி தொடக்கம் 04.30 மணி வரை பாண்டியன்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலயத்திலும், 05.00 மணி தொடக்கம் 05.30 மணி வரை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்திலும் எழுந்தேற்றம் இடம்பெற்றவுள்ளது.