மட்டக்களப்பு வாகரை திருகோணமலை வீதியில் விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாகரை திருகோணமலை வீதியில் விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு!
மட்டக்களப்பு வாகரை திருகோணமலை வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலையில் இருந்து வாகரை ஊடாக கண்டியை நோக்கிச் சென்ற சிறிய ரக காரானது பாதையை விட்டு விலகி வாகரை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள மின் கம்பத்தில் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் 74 வயதுடைய கண்டியைச் சேர்ந்த நாகபூசனி என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த ஏனையோர் காயங்கள் இன்றி தப்பித்துள்ளனர்.
ஜரோப்பிய நாடொன்றில் இருந்து சுற்றுலாவிற்காக வந்த தாய், மகள் மற்றும் சிறுவன் உட்பட்ட குடும்ப உறுப்பினர்களே விபத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.