புத்தாண்டு கொண்டாட்டம் – கலாச்சாரத்திற்கு அப்பால் சென்றால், கடும் நடவடிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டம் – கலாச்சாரத்திற்கு அப்பால் சென்றால், கடும் நடவடிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கலாசாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டுக்கள் இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.