ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சிறை காவலர் இருவர் கைது ‼️
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சிறை காவலர் இருவர் கைது ‼️
வீரவில திஸ்ஸபுர விடுதியில் தங்கியிருந்த சிறைக்காவலர் உட்பட மூவர கைது செய்யப்பட்டதாக வீரவில பொலிஸார் தெரிவித்தனர்.
வீரவில திஸ்ஸபுர விடுதியொன்றில் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாக வீரவில பொலிஸாருக்கு தகவல் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர் .
குறித்த விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அவர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் பொலன்னறுவை மற்றும் உஸ்வதகேயாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் கைதான சிறைக்காவலர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் கடமையாற்றும் எனத் தெரிய வந்துள்ளது .
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .