*ஹட்டனில் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை*
*ஹட்டனில் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை*
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (25.03.2024) விசேட விடுமுறை வழங்கவுள்ளதாக மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஆலய நிர்வாகத்தினால் விடுமுறைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையிலேயே, இந்த விடுமுறை, ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.