அதிக வெப்பநிலை காரணமாக செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து ; மருத்துவர்கள் எச்சரிக்கை!
அதிக வெப்பநிலை காரணமாக செல்லப்பிராணிகளுக்கு ஆபத்து ; மருத்துவர்கள் எச்சரிக்கை!
இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலையானது செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளையும் பாதிக்கிறது வெப்ப பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களை கூட ஏற்படுத்தக்கூடும் என்று கால்நடை மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிற்பகல் வேளைகளில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும், இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் வெளியில் நடக்க அழைத்துச் செல்வதாக இருந்தால் அதிகாலை வேளையில் செல்வது நல்லது என கிரிபத்கொட பெட் பிளஸ் கால்நடை வைத்தியசாலையின் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.
விலங்குகளின் உடல் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த தினமும் அவற்றை குளிப்பாட்டுவது, குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான நீர் வழங்குவது, மதியம் ஐஸ் கட்டிகள் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம்.
விலங்குகள் வெளியில் இருக்கும்போது மயங்கி விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் வரை குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதன் மூலம் அதன் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று டாக்டர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டுகிறார்.
கால்நடைகள் போன்ற விலங்குகளும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன, மேலும் வெப்பத் தாக்குதலுக்கு கூடுதலாக, வெண்மையான தோல் கொண்ட விலங்குகளுக்கு தோல் நோய் கூட ஏற்படலாம் எனவே அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்று கால்நடை மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளனர். .