வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைதானவர்களுக்கு நீதி கோரி வாகனப் பேரணி !
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைதானவர்களுக்கு நீதி கோரி வாகனப் பேரணி !
வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரையில் வாகன பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்து வவுனியா வரையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தரப்பினரால் இந்த வாகனப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
இன்று காலை 8 மணியளவில் குறித்த பேரணி ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் வாகனப் பேரணியின் நிறைவாக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.