வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள்!
வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? தவறியும் சாப்பிடாதீர்கள்!
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதில் காலை உணவு பிரதான இடம் வகிக்கின்றது. எனவே காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
காலை உணவு நமது ஆராக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது. பொதுவாகவே காலை உணவாக அதிக புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
உதாரணமாக முட்டை அவித்த பயறு அல்லது கடலை போன்ற உணவுகளை காலையில் எடுத்துக்கொள்வது சிறந்தது.
அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாதா உணவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிட கூடாதவை
பெரும்பாலான மக்கள் காலை உணவாக பழங்களை சாப்பிடுவார்கள், ஆனால் சில பழங்களை காலையில் சாப்பிடுவது நல்லதல்ல. அதிலும் சிட்ரஸ் பழங்களை காலை உணவாக எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சிட்ரஸ் பழங்கள் எனப்படுவது சிற்றிக் அமிலம் நிறைந்த பழங்களை குறிக்கும் ஆரஞ்சி, எலுமிச்சை, வாழைப்பழம் போன்ற வைட்டமின் -சி சத்து அதிகம் காணப்படும் புளிப்பு சுவையான பழங்களை குறிக்கின்றது.
இது அமில தன்மை கொண்டது, இது வாயு பிரச்சனையை அதிகரிக்கிறது. சிட்ரஸ் பழங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது.மேலும் இது பல உடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள சிட்ரிக் அமிலம் தோல், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்துகிறது.
வாழைப்பழம் உடலுக்கு நல்லது என்பதால் காலையில் சிலர் இதனை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது இதயத்தின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது. வாழைப்பழங்களில் இயற்கையான சர்க்கரையும் அதிகமாக உள்ளது, சராசரியாக வாழைப்பழத்தில் 25% சர்க்கரையாக இருப்பதால், உங்களுக்கு ஆரம்ப ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது, ஆனால் பிற்காலத்தில் ஆபத்தான நிலையை உருவாக்கும்.
தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்ககும்.
காலை உணவாக தயிர் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தின் படி, தயிர் உட்கொள்வது உடலில் சளி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது.
வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவதால் சளி பிரச்சனைகள் ஏற்படும். இதில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் பி12 ஏராளமாக உள்ளது, தயிர் மதிய வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இவ்வாறான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியம் படித்ததில் பிடித்தது