அமீர்கானின்தங்கல்’ திரைப்பட குழந்தை நட்சத்திரம் 19 வயதில் மரணம்!!
அமீர்கானின்தங்கல்’ திரைப்பட குழந்தை நட்சத்திரம் 19 வயதில் மரணம்!!
2016ல் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சுஹானி பட்னாகர் அவரது 19 வயதில் காலமானார்.
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மரணித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான், கிரண் ராவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு ஹிந்தியில் உருவான ‘தங்கல்’ திரைப்படம் பிற மொழிகளிலும் வௌியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த திரைப்படம் ஒரு ‘பயோகிராபிகள் ஸ்போர்ட்ஸ் டிராமா’ வகையிலான திரைப்படமாகும்.
இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை சுஹானி பட்னாகர்.
குறித்த திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் சுஹானி. கடந்த சில காலங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுஹானி, உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று (17) காலை உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சுஹானி பட்னாகர் தனது 19ம் வயதில் உயிரிழந்திருப்பது திரையுலகினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுஹானி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானதாக Aamir Khan Productions நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.