யாழ்ப்பாணம் கோண்டாவில் காரைக்கால் இணுவில் கிழக்கு புகையிரத கடவை கோர விபத்து – அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை!
யாழ்ப்பாணம் கோண்டாவில் காரைக்கால் இணுவில் கிழக்கு புகையிரத கடவை கோர விபத்து – அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை!
கட்சி நிதியிலிருந்து வழங்கவும் ஏற்பாடு!
கோண்டாவில் காரைக்கால் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிக்ஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை புகையிரத கடவையில் ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு நலைவர் கௌரவ அமச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார்.
நேற்று முன் தினம் இணுவில் பகுதியில் ஏற்பட்ட புகையிரதத்துடன் வான் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக 3 மாத சிறு குழந்தையும்,32, வயதான தந்தையும் என இருவர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய தினம்(16) களவிஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து பார்வையிட்டிருந்தார்.
நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர்
துறைசார் திணைக்களத்துடன் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடி சமிக்ஞ்ஞை விளக்கை பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டார்.
குறித்த நடவடிக்கை நடைபெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அதுவரை தற்காலிக ஏற்பாடாக கிராமத்து இளைஞர் இருவரை காவல் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் அதற்கான மாதாந்த கொடுப்பனவை தனது கட்சி நிதியில் இருந்து வழங்குவதாகவும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.