அரச இலக்கிய விருது விழா -2024
அரச இலக்கிய விருது விழா -2024
2024 அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பில் நூல்களை சமர்பித்தல்!
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவலகள் அமைச்சு மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் அரச இலக்கியவிருது வழங்கல்தொடர்பாக இலங்கை எழுத்தாளர்களுக்கும் மற்றும் பதிப்பாளர்களுக்கும் மற்றும்வெளியீட்டடாளருக்கும் இவ்வறித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருது வழங்கும் வைபவத்தின் பொருட்டு 2023ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட நூல்களை மதிப்பீடு செய்யும் போது அதனை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்கில்எழுந்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தமது நூல்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கத்தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 01 திகதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 31ஆம் வரையிலான காலப்பகுதியில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டதும். 49பக்கங்களுக்கு குறையாதுமான அச்சிடப்பட்ட நூலின் மூன்று (3) பிரதிகள் சமர்பிக்கப்பட வேண்டும்.
சமர்பிக்கப்பட வேண்டிய நூல்களை “அரச இலக்கிய குழு கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 8 ம் மாடி செத்சிறிபாய பத்திரமுல்ல என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கிடைக்கச்செய்யலாம்.
நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இறுதித்தினம் 2024 மார்ச் மாதம் மாதம் 31ஆம் திகதி ஆகும்.
அரச விருது வழங்குவதற்காக நூல்களை மதிப்பீடு செய்வதற்கு கீழ்காணும் பிரிவுகள் சார்ந்த சிங்கள தமிழ் மதிப்பீடு செய்வதற்கு கீழ்காணும் பிரிவுகளை சார்ந்த சிங்கள தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
* சுய நாவல்
* சுய சிறுகதை தொகுப்பு
* சுய கவிதை தொகுப்பு சுய இளையவர் இலக்கியம்
* சுய பாடலாக்கத் தொகுப்பு
* சுய நாடக இலக்கியம்
* சுய அறிவியல் புனைகதை
* சுய சிறுவர் இலக்கியம் (16 பக்கங்களுக்கு குறையாமல் இருந்தால் வேண்டும்.
* சுய புலமைத்துவ மற்றும் ஆய்வாளர் நூல்
* சுய இலக்கிய திறன்னாய்வு
* சுய ஒளி படைப்பு பிரகாசிக்க நூல்
* சுய நாடளாவிய விடய நூல்கள்
* மொழிபெயர்ப்பு-நாவல்
* மொழிபெயர்ப்பு- சிறுகதை தொகுப்பு
* மொழிபெயர்ப்பு -கவிதை தொகுப்பு
* மொழிபெயர்ப்பு -நாடகம்
* மொழிபெயர்ப்பு -புலமைத்துவ மற்றும் ஆய்வாளர் நூல்
* மொழிபெயர்ப்பு -நானாவித விடய நூல்கள்
* மொழிபெயர்ப்பு -இளையோர் இலக்கியம்
* மொழிபெயர்ப்பு -சிறுவர் இலக்கியம்
* மொழிபெயர்ப்பு -சிறுவர் இலக்கிய திறனாய்வு நூல்
* மொழிபெயர்ப்பு -ஒலி ஒளி படைப்பு பிரகாசிக்க நூல்
இது குறித்து மேலதிகவிபரங்களைக்ககாக தொடர்பு கொள்ளவும்-
தொ.பே-0112872030 அல்லது 0112872031
கலாச்சார அலுவல்கள் பணிப்பாளர்.
கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.
8 ம் மாடி செத்சிறிபாய ,பத்திரமுல்ல