மரக்கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!
மரக்கிளை முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு!
நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நியூட்டன் தோட்டத்தில் உள்ள நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி பயின்று வரும் வச்சிகுவோம் முருகன் அஷால் என்ற 14 வயதுடைய மாணவன் சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த வேளையில், மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்ததால் அம்மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடற் கூற்று பரிசோதனை இன்று சிறுவனின் தந்தை முருகன் முன்னிலையில் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொள்ள உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் 03.02.2024 மதியம் 12 மணிக்கு நோர்வூட் நியூட்டன் தோட்டத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.