யாழில் தீக்கிரையாக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள்!
யாழில் தீக்கிரையாக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (05.01.2024) இரவு இடம்பெற்றுள்ளதோடு, இது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக இரண்டு வன்முறை கும்பல் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இவ்வாறு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மேலும், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.