விபத்து காரணமாக சனத் நிஷாந்தவின் வாகனம் தாக்கப்பட்டது!
![விபத்து காரணமாக சனத் நிஷாந்தவின் வாகனம் தாக்கப்பட்டது!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/12/FB_IMG_1703843066980.jpg)
விபத்து காரணமாக சனத் நிஷாந்தவின் வாகனம் தாக்கப்பட்டது!
மாரவில பிரதேசத்தில் இன்று காலை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவரது வாகனம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் பயணித்தவர்கள் இராஜாங்க அமைச்சரின் ஜீப் மீது தாக்குதல் நடத்தியதுடன், காருடன் மோதியதில் சேதம் விளைவித்துள்ளனர்.
மாரவில மொதரவெல்ல தேவாலயத்திற்கு முன்பாக இன்று காலை இராஜாங்க அமைச்சர் தங்கொட்டுவைக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வாகனம் சேதமடைவதைக் கண்டு ஆத்திரமடைந்த வர்த்தகர் ,ஜீப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஜீப் மீது இரும்பு கம்பியால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.