திருகோணமலையில் இரு குழுக்களிடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

திருகோணமலையில் இரு குழுக்களிடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!
திருகோணமலை- ஹபரனை , பலுகஸ்வௌ பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வேலைத்தளத்தில் பணியுரியும் இரண்டு நபர்களுக்கிடையிலேயே மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வேலைத்தளத்தில் இலங்கை மற்றும் சீனப்பணியாளர்கள் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு தொழிலாளர்களுக்கு இடையில் காணப்பட்ட தனிப்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.