தரமற்ற பென்சில் மதிய உணவுப் பெட்டிகளால் குழந்தைகளுக்கு உடல் நலப் பாதிப்பு !

தரமற்ற பென்சில் மதிய உணவுப் பெட்டிகளால் குழந்தைகளுக்கு உடல் நலப் பாதிப்பு !
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த பென்சில்கள், வண்ண பென்சில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகள் போன்றவற்றால் சிறுவர்கள் கடுமையான உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் மஹிந்த விக்கிரமாராச்சி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களின் மேற்பரப்பில் பூசப்பட்ட வண்ணங்களில் கன உலோகங்கள் இருக்கலாம் என்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள் மற்றும் பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்களின் சர்வதேச தரம் EN71-3 ஆக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தரம் குறைந்த இறக்குமதி செய்யப்பட்ட பென்சில்கள், வண்ண பென்சில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது குழந்தைகள் பென்சில்களை வாயில் வைப்பதால்… அல்லது மெல்லுவதால்,அவர்களின் உடலில் தீங்கு விளைவிக்கும் கன உலோகங்கள் நுழையலாம். இது பெரிய ஆபத்து, எனவே, பிள்ளைகளின் பாவனைக்காக வெளியில் 05 இலக்கம் கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகளை மாத்திரம் வழங்க வென்றும் என்று அவர் தெரிவித்துள்ளார்.