4000 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது!
4000 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது!
200 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் தொகையுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவேந்திரமுனையை அண்மித்த கடற்பரப்பில் பயணித்த உள்நாட்டு படகொன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியை கொண்ட ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது