கூகுள் க்ரோம் பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு – புதுப்பித்துக் கொள்ள அறிவுரை!
கூகுள் க்ரோம் பயனாளர்களுக்கு விசேட அறிவிப்பு – புதுப்பித்துக் கொள்ள அறிவுரை!
பிரபல தேடுதள நிறுவனமான கூகுள் க்ரோமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து புதுப்பித்துக் கொள்ள கணினி அவசர நிலைக் குழு அறிவுரை.
தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கணினி மற்றும் கணினியால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்காகவும், பாதிப்புகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாகவும் ஒன்றிய அரசு கணினி அவசர நிலை உதவி குழுவை தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த குழு கூகுள் க்ரோமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டறிந்து உள்ளது.
இந்திய கனிணி அவசரநிலை உதவி குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது. உலகின் மிகப்பெரிய தொலைதொடர்பு தேடுதள நிறுவனமாக விளங்கிவரும் கூகுள் க்ரோமில் பாதுகாப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த குறைபாட்டின் மூலம் கோட் இயக்க சேவையை கட்டுப்படுத்த முடிகிறது.
மேலும் கூகுள் க்ரோமில் விண்டோஸ் ஓ எஸ் 118.0.5993.70 மற்றும் 118.0.5993.71 ஆகிய முந்தைய பதிப்புகள் மற்றும் ஐமேக், வினக்ஸ் இயக்கத்தோடு தொடர்புடைய க்ரோ118.0.5993.70 ஆகிய தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கூகுள் க்ரோமில் புதிய அப்டேட்டுகளை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதிப்புகளை தவிர்த்து மற்ற பதிப்புகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கூகுள் க்ரோம் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.