கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது நினைவேந்தல் முன்னெடுப்பு!
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது நினைவேந்தல் முன்னெடுப்பு!
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் கொலை செய்தது.
அந்நாளின் 36 வது நினைவு தினம் இறந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் நினைவு கூறப்பட்டது.
இதன்போது வீதியோரமாக அமைந்துள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.