கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள்!
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள்!
யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இன்று இடம்பெற்றது.
விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நிறைவையோட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சு மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள்,ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் பாடசாலை அதிபர்கள் முன்னாள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.