யாழில் வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு குட்நியூஸ்..!தவற விடாதீர்கள்..!
யாழில் வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு குட்நியூஸ்..!தவற விடாதீர்கள்..!
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் கந்தர்மடம், கல்வியங்காடு ஆகிய இரு இடங்களில், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் தொழில்துறை திணைக்களத்தினால் இயக்கப்படும் இரண்டு நெசவு சாலைகளில் பயிற்சியாளர்களாக இணைந்து தொழில் முயற்சியாளர்களாக மாறுவதற்கு அரிய வாய்ப்பு
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முதல் 6 மாதம் முழுமையான பயிற்சிகள் வழங்கப்படும் பயிற்சி காலத்தில் நாள் ஒன்றிற்கு ரூபா 200 ஊக்க தொகையாக வழங்கப்படும்.
குறிப்பிட்ட பயிற்சி காலத்தில் பயிற்சிக்கு தேவையான சகல வழிகாட்டல்களும் தகுதியான ஆசிரியரால் வழங்கப்படுவதுடன் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி நிறைவில் நல்லதொரு நெசவாளராக மாறுவதுடன் தமது சிறந்த நாளாந்த வருமானத்தினைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் 50 வயதிற்குட்பட்ட ஆண் பெண் இருபாலாரும் இப் பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே தொழில் வாய்ப்பினை தேடுவோர் இச் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி ஒரு தொழில் முயற்சியாளராக மாறுவதற்கான சந்தர்ப்பம் இதுவெனவும் மேலதிக விபரங்களுக்கு 0777068632 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.