இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.
இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.!
📷 ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்…
📷 எழுபத்தைந்து வயதில்….. ஆதரவு இன்றி நிக்குது மனசு…
📷 நாற்பதைந்து வருடம் – ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….
📷 என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்….
📷 அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்…
📷 ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்…
📷 ஒரு நாளாவது அவளுக்கு பதில் – நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்…
📷 ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்…
📷 ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்…
📷 ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் – அவளை வெளியிளே அழைத்து சென்று இருக்கலாம்…
📷 ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்…
📷 அவள் விரும்பி கேட்காத போதும் – ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்…
📷 ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்…
📷 ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்…
📷 நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்…
📷 நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்…
📷 அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்…
📷 அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் – அவளை
கவனித்து இருக்கலாம்…
📷 அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்…
📷 என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்…
📷 நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்…
📷 என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை…
📷 தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது…
📷 என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்…
📷 நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு…
📷 மூச்சு இழந்த – உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்…
மனைவியே! என்னை மன்னித்து விடு…
📷 மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு… நான் உன்னை கொண்டாட வேண்டும்…
📷 எழுபத்தைந்து வயதில்… இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க….
உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்
வாழ்க்கை வசந்தமாகும்.
*தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்*🤗