16 மணி நேர போராட்டம். வெற்றிகரமாக இரட்டையர்களைப் பிரித்தெடுத்த சவுதி மருத்துவர்கள்!
![16 மணி நேர போராட்டம். வெற்றிகரமாக இரட்டையர்களைப் பிரித்தெடுத்த சவுதி மருத்துவர்கள்!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/FB_IMG_1696827997908.jpg)
16 மணி நேர போராட்டம். வெற்றிகரமாக இரட்டையர்களைப் பிரித்தெடுத்த சவுதி மருத்துவர்கள்!
தன்ஸானியாவைச்சேர்ந்த ஹஸன், ஹுஸைன் ஆகிய ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை 16 மணித்தியால தொடர் சத்திர சிகிச்சை, முயற்சியின் பயனாக இருவரும் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர்.
சென்ற 6ம் திகதி நடைபெற்ற சத்திர சிகிச்சையின் பின்பு பெற்றோருடன் இருவரும் சந்தோசமாக இருப்பதுடன், நீண்ட காத்திருப்பின் பின்னர் மன்னர் ஸல்மானின் வேண்டுகோளுக்கிணங்க நடைபெற்ற இச்சேவைக்காக ஸல்மான் நிவாரண மற்றும் மனிதநேய உதவிகளுக்கான மையத்திற்கு அவர்களின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
கலாநிதி அஷ்ஷெய்க் எம்.பி.எம்.இஸ்மாயீல் மதனி