கடனில் மிதக்கும் இலங்கை – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
கடனில் மிதக்கும் இலங்கை – அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
சர்வதேச கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டத்துக்கமைய 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியில் அரசாங்கம் செலுத்தியிருக்கவேண்டிய மொத்த கடன் தொகை 37 பில்லியன் அமெரிக்க டொலராகும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி 1250 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி 1000 மில்லியன் டொலரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி 500 மில்லியன் டொலரும் மீளச் செலுத்த வேண்டியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி 650 மில்லியன் டொலர் கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03ஆம் திகதி 1500 மில்லியன் டொலர் கடன் தொகையை மீளச் செலுத்தவேண்டியுள்ளது.
2026 ஆம் ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி 1000 மில்லியன் டொலரும் 2027ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி 1500 மில்லியன் டொலரும் 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி 1250 மில்லியன் டொலரும் 2029 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி 1400 மில்லியன் டொலரும் 2030 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி 1500 மில்லியன் அமெரிக்க டொலரும் செலுத்த வேண்டியுள்ளது.
ஆகவே, 2025ஆம் ஆண்டு வரை நாட்டை யார் ஆட்சி செய்தாலும் இந்த கடன்களை மீளச்செலுத்துவதற்கு அவர்கள் சட்ட ரீதியாக கடமைப்பட்டுள்ளார்கள். இதிலுள்ள பாரதூர தன்மையை நாடென்ற அடிப்படையில் நாம் சகலரும் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.