31.05.2023 நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் 19 வது வருட நினைவேந்தல்!
31.05.2023 நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன் 19 வது வருட நினைவேந்தல்!
31.05.2004அன்று மட்டக்களப்பில் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் துணை இராணுவக்குழுவான கருணா – பிள்ளையான் – இனியபாரதி குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளரான நாட்டுப்பற்றாளர் நடேசன் அவர்களின் 19வது வருட நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இவ் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கொள்கை பரப்புச் செயலாளர் சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு இன்று!
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்கள் அரச ஆதரவு ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட 19ஆவது ஆண்டு நினைவு நாள்!
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜ .நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.
நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.
இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.