பாடசாலை மாணவ மாணவிக்கு நடந்த கல்யாணம்..!! இலங்கையில் சம்பவம்.!
பாடசாலை மாணவ மாணவிக்கு நடந்த கல்யாணம்..!! இலங்கையில் சம்பவம்.!
பாடசாலையில் கல்வி பயிலும் 10 ஆம் வகும்பு மாணவன் ஒருவன் 09 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே வேறு ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளான்.
மாணவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டான நிலையில் சென்ற வருடம் குறித்த மாணவன் 09 ஆம் தரத்தில் கல்விகற்கும் போது 08 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவிக்கு யாருக்கும் தெரியாது இரகசியமாக தங்கத்தில் தாலி கட்டியுள்ளான்.
இதனை ஒரு வருடங்களாக யாரும் அறியாத நிலையில் நாட்கள் நகர்ந்துள்ளது. இவ்வாறிருக்கையில் அண்மையில் பாடசாலையில் நிகழ்வொன்று இடம்பெற்றமையால் அதில் குறித்த மாணவியும் கலந்து கொண்டுள்ளார்.மாணவி எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் இருந்த தாலியை சக மாணவிகள் கண்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆசிரியை கழுத்தை காட்டும் படி குறித்த மாணவியை விசாரித்து கேட்ட போதிலும் மாணவி தயக்கம் காட்டி மறுத்துள்ளார்.
மாணவியின் நடத்தையால் சந்தேகமடைந்த ஆசிரியை கட்டாயமாக மாணவியின் கழுத்தை பார்த்த போது தாலி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இதையடுத்து ஆசிரியை குறித்த மாணவன் மற்றும் மாணவியின் வீட்டில் இது தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளார்.