பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு – எரிசக்தி அமைச்சு மோதல் முக்கிய கட்டத்துக்கு!!
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு – எரிசக்தி அமைச்சு மோதல் முக்கிய கட்டத்துக்கு!!
இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையில் நிலவும் மோதல்கள் அடுத்த வாரத்தில் முக்கியக் கட்டத்தை நோக்கி நகர்கின்றன.
மின்சாரக் கட்டண உயர்வுக்கு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எதிர்ப்பு வெளியிட்டது முதல், இந்த மோதல் ஆரம்பித்தது.
இந்தநிலையில், ஜனக ரத்நாயக்கவை, ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
இது எதிர்வரும் 24ஆம் திகதியன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான பிறநகர்வுகளும் நடந்து வருகின்றன.