கனடாவில் ஓய்வூதிய வயதில் மூதாட்டிக்கு குவிந்த உதவிகள்!!
கனடாவில் ஓய்வூதிய வயதில் மூதாட்டிக்கு குவிந்த உதவிகள்!!
கனடாவில் ஓய்வூதிய வயதில் மூதாட்டிக்கு குவிந்த உதவிகள்
அமெரிக்காவில், தனது 91ம் வயதில் ஓய்வு பெற்றுக் கொண்ட மூதாட்டி ஒருவருக்கு பலரும் உதவிகளை வழங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் ஒரிகோனின் மெட்போர்ட்டில் 91 வயதான பெடி க்ளோவர் என்ற மூதாட்டி, சுப்பர் மார்கட் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
ஓய்வு பெற்றுக் கொண்டதன் பின்னர் தனது செலவுகளை செய்ய முடியாத காரணத்தினால், ஓய்வூதிய நிதியைத் திரட்டியுள்ளளார்.
GoFundMe fundraiser என்ற பெயரில் இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.
ஓய்வின் பின்னர் மாதாந்த செலவுகள், மருந்துச் செலவுகள், மளிகை செலவுகள் உள்ளிட்டவற்றை செலுத்த முடியாத நிலைமை ஏற்படுவதாக அந்த மூதாட்டி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மூதாட்டியின் பேத்தியொருவர் இணைய வழியில் நிதி திரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இந்த நிதி திரட்டல் முயற்சிக்கு 75000 டொலர்கள் பணம் திரட்டப்பட்டுள்ளது.
கருணை உள்ளம் கொண்ட பலர் இவ்வாறு நிதி உதவி வழங்கியுள்ளனர். இவ்வாறு பாரியளவு நிதி கிடைக்கப் பெற்றதன் காரணமாக தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக குறித்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.