தற்கொலை ஒரு தீர்வல்ல . எந்தத்தடைகளைத்தாண்டியும் வாழலாம் என்று அறைகூவல் விடுத்தார் திருமதி வாசுகி சுதாகர் ..
தற்கொலை ஒரு தீர்வல்ல . எந்தத்தடைகளைத்தாண்டியும் வாழலாம் என்று அறைகூவல் விடுத்தார் திருமதி வாசுகி சுதாகர் .
தொடர்புகளுக்கு. 0778834066
************************************
மனித வாழ்க்கையில் எல்லோருக்கும்
பிரச்சனைகள் ஏற்படுவது என்பது சாதாரணமானதுதான். பிரச்சனை இல்லாத மனிதர்களே உலகத்தில் இல்லை எனலாம். அத்தகைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பலவழிகளில் உண்டு. ஆனால் அண்மைக்காலமாக நமது பிரதேசங்களிலே பல இளைஞர்கள் யுவதிகள் பெண்கள் ஆண்கள் என்று பலரும் பிரச்சனைக்கான தீர்வாக தற்கொலையைக் கையில் எடுத்துக்கொள்கின்றார்கள். உண்மையில் அது ஒரு தவறான முடிவாகும் . தற்கொலை ஒரு தீர்வல்ல. இந்தத் தற்கொலையைப்புரிவதற்கு ஒருமனிதன் எடுக்கும் அந்தத் துணிவை தனது பிரச்சனகளை உதறி தள்ளி மீண்டெழுவதற்
கான துணிவாக ஒரு சக்தியாக எடுத்துக்கொண்டாலே வாழ்க்கையை நிமிர்த்தி புத்துயிர் கொடுத்து வாழ்ந்து விடலாம்.
உண்மையில் இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் அதிகரித்து என்ன செய்வது என்றே தெரியாமல் யாரிடமும் தமது பிரச்சனக்கான ஆறுதலைப்பெறமுடியாமல் தமது வாழ்க்கையை அந்தரத்தில் முடித்துக் கொள்கின்றார்கள் நமது இளைய சமுதாயம்.
உண்மையில் இந்த முயற்சியை எடுக்க நினைப்பவர்கள் உண்மையாக தமது பிரச்சனை தொடர்பாக யாரோ ஒருவருடன் மனம்விட்டுக்
கதைத்தாலே அந்த எண்ணம் தள்ளிப்போக வாய்ப்புண்டு . யாரையும் நம்பமுடிய
வில்லை என்று புலம்புவதைவிட யாரோ ஒருவரிடம் பிரச்சனையை க்கூறி மனம் ஆற அழுது கொட்டித்தீர்த்து
விட்டாலே ஓரளவு பாரம்இறங்கி தற்கொலை எண்ணம் திசை மாற சந்தர்ப்பம் உண்டு என்பதை நம்புங்கள். நம்பிக்கை தான் வாழ்க்கை.
எனவே உண்மையில் மனச்சிக்கல் மன அழுத்தம் உள்ளவர்கள் உங்கள் பிரச்சனைகளிலிருந்து மாற்றம் பெற உடனடியாக ஒரு உளவளத்துணையை நாடுவதே சாலச்சிறந் தது . அந்தவகையிலே மனழுத்தம் உள்ளவர்கள் எம்மை நாடும் பட்சத்தில் உங்களுக்கான மன அழுத்தம வெளியேறி மனமாற்றம் ஏற்படவும் உங்கள் எண்ணங்களைப்பாதுகாத்து வாழ்க்கையினை மாற்றி வாழ்வினை சிறப்போடு வாழ வழி ஏற்படுத்தலாம் .
இன்று எம்மத்தியிலே இளைஞர்கள் போதைப்பாவனை அதிகரிப்பில் தம்மை்காப்பாற்றமுடியாது தற்கொலைக்குப்போகின்றார்கள் அதிலிலிருந்து மீளமுடியாதவர்களாக ஒருபுறமும்
தொலை பேசியின் பலசிக்கல் நிலைகளின் தொடர்ச்சி ஒருபுறமும் பொருளாதார வறுமை
கல்விச்சீரழிப்பு கலாச்சாரப்
பண்பாட்டின் பிறழ்வான மாற்றங்கள் என்று பல திடீர் மாற்றங்கள் 2009க்குப் பின் இப்படியான நிலைமைகள் தமிழர் வாழ்வில் மாற்றங்களை கொட்டிவிட்டிருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து வாழ்க்கை வாழ்வதற்கே நாம் வாழ நம்
இனம் வாழ வழிசமைப்போம் .
மன அழுத்தம்போக்கி மகத்தான வாழ்வைப்
பெறுவோம்.
திருமதி வாசுகி சுதாகர் .
தொடர்புகளுக்கு. 0778834066