இன்றைய ராசிபலன்22.04.2023 கடக ராசிக்குகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.
இன்றைய ராசிபலன்22.04.2023 கடக ராசிக்குகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.
இன்றைய பஞ்சாங்கம்
22.04.2023 சித்திரை 9 சனிக்கிழமை துதியை திதி காலை 7.49 வரை பின்பு வளர்பிறை திதியை கிருத்திகை நட்சத்திரம் இரவு 11.24 வரை பின்பு ரோகிணி.சித்தயோகம் இரவு 11.24 வரை
பின்பு அமிர்தயோகம் கிருத்திகை விரதம் அட்சய திருதியை குருபெயர்ச்சி காலை 5.14
இராகு காலம் 09-00-10.30 எமகண்டம்
மதியம் 01.30-03.00 குளிகன் காலை 06.00-7.30 சுபஹோரைகள் 07.00-08.00,பகல் 10.30-12.00 மாலை 05-00-07-00 இரவு 09.00 -10.00
இன்றைய ராசிபலன்
மேஷ ராசி அன்பர்களே!
உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
ரிஷப ராசி அன்பர்களே!
வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் கடன் வாங்காமல் சமாளித்துவிடுவீர்கள். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரண மாக உடல்அசதி உண்டாகும். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதன் மூலம் மனஅமைதி பெறலாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். விற்பனை வழக்கம்போலவே இருக்கும். அம்பிகையை வழிபட சிரமங்கள் குறையும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.
மிதுன ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உங்கள் ஆலோசனை உறவினர்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.