கிளைமோர்த் தாக்குதலின் மூலம் படுகொலை செய்யப்பட்ட,வடக்கு,கிழக்கு மனித உரிமைகள் பணியகத்தின் பணிப்பாளர் சே.கருணாரட்ணம் (கிளி ஃபாதர்) அவர்களின் நினைவேந்தல்!!
கிளைமோர்த் தாக்குதலின் மூலம் படுகொலை செய்யப்பட்ட,வடக்கு,கிழக்கு மனித உரிமைகள் பணியகத்தின் பணிப்பாளர் சே.கருணாரட்ணம் (கிளி ஃபாதர்) அவர்களின் நினைவேந்தல்!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்-அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி ஃபாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (20) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்ப்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பா.உறுப்பினர்களான கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
படுகொலை செய்யப்பட்ட வணபிதா கனகரட்ணம் (கிளி ஃபாதர்) வடகிழக்கு மனித உரிமைகள் பணிப்பாளராகவும் யுத்த காலங்களில் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
20-04-2008 அன்று ஞாயிற்றுக்கிழமை மல்லாவி வன்னிவிளான்குளம் அம்பாள்புரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஆராதனையில் கலந்து விட்டு தனது வாகனத்தில் திரும்பிக்கொன்ன்டு இருந்த பொழுது, சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.