கனடாவில் பரவும் அரிய வகை உண்ணிக் காய்ச்சல்!!
கனடாவில் பரவும் அரிய வகை உண்ணிக் காய்ச்சல்!!
மலேரியா நோய்க்கு நிகரான ஓர் வகையான நோயாக இந்த உண்ணிக்காய்ச்சல் கருதப்படுகின்றது
கனடாவில் உயிராபத்தைக் கூட ஏற்படத்தக் கூடிய அரிய வகை உண்ணிக் காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்களை இந்த நோய் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மலேரியா நோய்க்கு நிகரான ஓர் வகையான நோயாக இந்த உண்ணிக்காய்ச்சல் கருதப்படுகின்றது.
மேலும், எட்டு கால்களைக் கொண்ட இரத்தம் உறிஞ்சும் தன்மைக் கொண்ட இந்த அரிய வகை உண்ணிகள் அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்ற நிலையில், அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அதிகளவில் பரவி வரும் இந்த உண்ணிக்காய்ச்சல் கனடாவிலும் பரவக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.