கத்திரிக்காய் பொடிக் கறியை இப்படி செஞ்சு பாருங்க.!!
கத்திரிக்காய் பொடிக் கறியை இப்படி செஞ்சு பாருங்க.!!
5 நிமிடத்தில் ரொம்ப வித்தியாசமா டேஸ்டியான இந்த கத்திரிக்காய் பொடிக் கறியை இப்படி செஞ்சு பாருங்க.
கத்திரிக்காயை வைச்சி இப்படி கூட செய்யலாமான்னு நீங்க யோசிச்சி இருக்கவே மாட்டீங்க.
காய்கறி வகைகளில் பெரும்பாலும் கத்திரிக்காய் அதிகம் யாரும் விரும்புவது கிடையாது. கத்திரிக்காய் ரொம்பவே சுவை மிகுந்த சத்துமிக்க ஒரு காய் தான். இந்த சமையல் குறிப்பு பதிவில் கத்தரிக்காயை வைத்து ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் சுவையான ஒரு பொடிக் கறியை எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
கத்திரிக்காய் பொடிக் கறி செய்ய தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் – 250 கிராம் உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், தனியா – 2 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, உப்பு – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், கடுகு -1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து.
கத்திரிக்காய் பொடி கறி செய்முறை விளக்கம்:
இதை செய்ய முதலில் கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் உளுத்தம் பருப்பை சேர்த்து லேசாக வருத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு அனைத்தையும் சேர்த்து சிவந்து வரும் படி வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொர கொரப்பாக பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு கருவேப்பிலை கத்தரிக்காயும் சேர்த்து லேசாக வதக்கிய பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து தட்டு போட்டு மூடி கத்திரிக்காய் இரண்டு நிமிடம் வேக விடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து ஏற்கனவே நாம் பொடித்து வைத்த பொடியை இதில் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் லேசாக பிரட்டி எடுத்தால் போதும். கத்திரிக்காய் குழைந்து வேக கூடாது. கத்திரிக்காய் முழுதாய் இருந்தால் தான் சாப்பிட்டும் போது நன்றாக இருக்கும். அவ்வளவு தான் சுவையான கத்திரிக்காய் பொடி கறி ரெடி.
இதை சாதம், சப்பாத்தி, வெரைட்டி ரைஸ் போன்றவற்றின் கூட வைத்து சாப்பிட ரொம்பவே பிரமாதமாக இருக்கும். இப்படி செய்து குடுத்தா கத்திரிக்காய் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடு வாங்க. கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணுங்க.