யாழில் வாழைக்குலை களவெடுத்த திருடனை பரிதாபம் பார்த்து விட்ட மனைவியை கோபத்தில் எட்டி உதைந்த கணவன்!!
யாழில் வாழைக்குலை களவெடுத்த திருடனை பரிதாபம் பார்த்து விட்ட மனைவியை கோபத்தில் எட்டி உதைந்த கணவன்!!
யாழ் உரும்பிராய் பகுதியில் தோட்டம் ஒன்றில் வாழைக்குலை வெட்டியவனை கையும் களவுமாக பிடித்துள்ளார் குடும்பஸ்தர். அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் அவனை ஒப்படைத்து பொலிசாரிடம் கொண்டு செல்ல ஆயத்தமாகியுள்ளார் குறித்த குடும்பஸ்தர்.
வாழைக்குலை களவெடுத்த கள்ளனை இளைஞர்கள் தாக்கியதால் முகம் மற்றும் உடலில் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை அவதானித்த குடும்பஸ்தரின் மனைவி கள்ளனுக்கு ஏதாவது ஆகிவிடும் எனப் பயந்து இளைஞர்களிடமிருந்து அவனை விடுவித்து அனுப்பியுள்ளார்.
பிடிபட்ட கள்ளனை பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதற்கு ஆட்டோவுடன் வந்த குடும்பஸ்தர், கள்ளனை மனைவி விட்டுவிட்டதை அறிந்து கடும் கோபமடைந்ததாக தெரியவருகின்றது. தான் கொண்டு வந்த கயிற்றினால் மனைவியைத் தாக்கியதுடன் கால்களாலும் உதைத்துள்ளார் மனைவியை.
அவரது கடும் கோபத்தை கண்ட இளைஞர்கள் அவர் கொண்டு வந்த ஆட்டோவிலேயே அவரை ஏற்றிக் கொண்டு வீடு வரை கொண்டு சென்று விட்தாகத் தெரியவருகின்றது. அத்துடன் மனைவியையும் குடும்பஸ்தரையும் சமாதானம் செய்த பின்னரே இளைஞர்கள் அங்கிருந்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.