இலவச கண்புரை சத்திரசிகிச்சை’ யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில்.
‘இலவச கண்புரை சத்திரசிகிச்சை’
யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை
சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் இன்று(11) முன்னெடுக்கப்பட்டது.
இவ் சிறப்பு கண் பரிசோதனை முகாமை, யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மருதங்கேணி வைத்தியசாலைக்கு நேரில் சென்று கண்காணித்தார்.
‘இலவச கண்புரை சத்திரசிகிச்சை’
யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியடன் இலவசமாக கண் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நோயாளர்களைத் தெரிவுசெய்யும் கண்பரிசோதனை முகாம்கள் பின்தங்கிய பிரதேசங்களில்; ஒழுங்குபடுத்தப்படவுள்ளன. இதன்பிரகாரம் இன்று 11.03.2023 சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இரண்டாவது கண்பரிசோதனை முகாம் வேலணை பிரதேச வைத்தியசாலை, மற்றும் மருதன்கேணி பிரதேச வைத்தியசாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது.
எனவே கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ள நோயாளர்கள் மேற்படி கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
Cut: Dr.ஆ.கேதீஸ்வரன்.