மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்-சுற்றிவளைத்த பொலிஸ்!
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று மாலை பெருமளவு கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பாதிகாரியும் பொலிஸ் பரிசோதருமான உதயானந்தன் தலமையிலான குழுவினர் விரைந்து செயற்ப்பட்டனர்.
பொலிஸார் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதில் 16 கிலோ கஞ்சாவும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாகவும் கஞ்சாவை கொண்டு சென்ற நபர் தப்பியோடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.