வடமராட்சியில் தொடர் களவு- சட்டம் தூங்குகிறதா? மக்கள் கேள்வி!
கரவெட்டி மத்தி சம்மந்தர் கடையடிப் பகுதியில் பட்டப்பகல் வேளை வீட்டிலில் நுழைந்த திருடர்களினால் அண்ணளவாக 36 பவுண் தங்க நகை திருடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(07) வீட்டில் இருந்தவர்கள் மல்லாகம் நீதிமன்றத்திற்கு காலை வேளையில் சென்றதை சாதகமாக பயன்படுத்தி வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 14 பவுண் நிறைவு உடைய தாலிக்கொடி உட்பட அண்ணளவாக 36 பவுண் நிறையுடைய தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். நீதிமன்றத்துக்கு சென்று விட்டு மாலை வேலை வீட்டிற்கு வந்த போதே திருட்டு இடம் பெற்றமை தெரியவந்தது.
இச் சம்பவம் தொடர்பில் இரவு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லியடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
- அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் பொலிசார் மற்றும் நீதித்துறை இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.