வட்டி வீத உயர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
வட்டி வீத உயர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
மத்திய வங்கியின் வட்டி வீத உயர்வை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கம் மீண்டும் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது இந்தத் தருணத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்த நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு அது பெரும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுத்து வரும் செயற்பாடுகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது.