பொதுஜன முன்னணி பதவியை இழக்கிறார் ஜீ.எல்.பீரிஸ்
பொதுஜன முன்னணி பதவியை இழக்கிறார் ஜீ.எல்.பீரிஸ்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நீக்க கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொருத்தமான பெயர்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சிவில் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அடுத்த வாரத்தில் நிறைவேற்று சபை கூடி தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.