அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர்கள் கைது…!
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர்கள் கைது…!
தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக,
நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது, சம்பந்தப்பட்ட வியாபாரிகள், சிவப்பு முட்டைகளை 50 ரூபாய்க்கும், வெள்ளை முட்டைகளை 48 ரூபாய்க்கும் விற்பனை செய்துள்ளனர்.
இதன்படி, சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும்,
சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.