யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வாள்வெட்டு – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வாள்வெட்டு – ஒருவர் கைது
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணையை முன்னெடுத்து வருவதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.