மதிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இவ்வாறு உயிரிழந்தவர் மாளிகாவத்தை கொழும்பு- 10 ஐச் சேர்ந்த பழனி கணேசதாசன்.
(வயது- 63) என்பவராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏழாம் திகதி அன்று தெல்லிப்பழையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மாவிட்டபுரம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பின் இருக்கையில் இருந்து சென்றவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமுற்ற நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சனிக்கிழமை(11) பிற்பகல் உயிரிழந்தார். இம் மரணம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.