விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை – இலங்கை இராணுவம் தகவல்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை – இலங்கை இராணுவம் தகவல்
பிரபாகரன் உயிருடன் இல்லை என இலங்கை இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் நலமுடன் உயிருடனும் இருப்பதாக பழ நெடுமாறன் தகவல் வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை இராணுவம் அதனை மறுத்துள்ளது.
2009 மே 18 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இறுதிக்கட்ட யுத்தத்தில் கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்ததாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.