சம்மாந்துறை நெய்னாகாடு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் இன்று (06) யானை தாக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நெய்னாகாடு பிரதேசத்தில் நடந்துள்ளதாக அப்பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிர் இழந்த 51 வயது நபர் சம்மாந்துறை சென்னல்கிராம் 2 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது
அவருடைய உடல் மேலதிக பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.