எரிபொருள் ஒதுக்கத்தை அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வேட்பாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை முன்வைத்துள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏற்கனவே அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.