இலங்கை தமிழர்கள் மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் சென்றடைவு!
இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கிளிநொச்சி நச்சிகுடா கடற்கரையில் இருந்து நேற்று காலை பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரைக்கு சென்றடைந்துள்ளனர்.
அவர்களை மரைன் போலீசார் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் சென்றவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வு.