பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்த பொலிசார் இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஒரு மாட்டின்
[22/01, 15:45] மிடியாமதி: குடத்தன கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கொண்டு இருந்த மாட்டு இறைச்சியும், இறைச்சிக்கு வெட்டுவதற்காக தயாராக கட்டப்பட்டிருந்த பசு மாடும் மீட்கப்பட்டுள்ளதுடன், கப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது இன்று அதிகாலை பருத்தித் துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்த பொலிசார் இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஒரு மாட்டின் இறைச்சியையும், இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாட்டை மீட்டுள்ளதுடன், கப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார், பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
[22/01, 15:48] மிடியாமதி: கோப்பாய் இராசபாதை வீதியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிசார் கூறினர்.