இலங்கைக்கு தொடர்ச்சியான நிதி, தொழில்நுட்ப ஆதரவை ஐ.நா உறுதி செய்கிறது
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அரசாங்கமும் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா, இந்த மீட்புக் காலத்தில் இலங்கைக்கான ஐநாவின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.