பாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க நடவடிக்கை -சுசில் பிரேமஜயந்த
கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நினைவாற்றல் திட்டத்தை அதிகரிக்கும் முன்னோடி வேலைத்திட்டம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இன்று காலை ஆரம்பமானது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், புதன்கிழமைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் இடம்பெறும் என்றார்.
“மார்ச் 27, 2023 முதல் பாடசாலை ஆண்டின் முதல் நாளிலிருந்து மாணவர்கள் இந்த திட்டத்தைப் பயிற்சி செய்யும் நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளது. அதன்படி, வாரந்தோறும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முப்பது நிமிடங்களுக்கு இதனை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.