உள்ளூராட்சி தேர்தல் இன்று வேட்பு மனு அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் அறிவித்தல் இன்று மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.
தேர்தல்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானியும் வெளியாக்கப்படும்.
மாவட்ட செயலாளர்களை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளாகவும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளையும் பெயரிட்டு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானி வெளியாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.